கொடைக்கானலில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் வணங்காமுடி’..!


இந்த செகன்ட் இன்னிங்ஸில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக பட்டையை கிளப்பி வரும் அரவிந்த்சாமி, பல படங்களில் தொடர்ந்து கதையின் நாயகனாக முன்னணி ஹீரோக்களை விட பிஸியாக நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் செல்வா டைரக்சனில் அவர் நடித்துவரும் ‘வணங்காமுடி’.

முதன்முறையாக இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று முடிந்துள்ளது. இங்கே பிரமாண்டமான செட் அமைத்து பாடல் காட்சியை படமாக்கி முடித்துள்ளார்கள். இதை தொடர்ந்து சேசிங் மற்றும் இன்னொரு பாடல் காட்சிக்காக கொடைக்கானல் பறக்க இருக்கிறது வணங்காமுடி டீம்..

அதை தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தினால் ஷூட்டிங் ஓவர். ரொமான்ஸ் நாயகனை வில்லனாக பார்க்க முடியும் என நாம் கனவிலும் நினைத்திராத ஒன்றை தனி ஒருவன், போகனில் நிகழ்த்திக்காட்டிய அரவிந்த்சாமி, அதேபோல இந்த வணங்காமுடியில் அதிரடி போலீசாகவும் அசத்துவார் என உறுதியாக நம்பலாம்.

Leave a Response