சாதித்தவர் அன்புமணி – விளம்பரம் மோடிக்கா? பாஜகவின் வெட்கம் கெட்ட விளம்பர அரசியல்

இந்தியாவில் போலியோவை ஒழிப்பதில் தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டி சாதித்தவர் மருத்துவர் அன்புமணி அவர்கள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பாகவே இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இப்படி, மோடி பதவியேற்கும் போதே இந்தியாவில் இல்லாது ஒழிக்கப்பட்டுவிட்ட நோயை – நரேந்திர மோடி ஒழித்ததாக இப்போது விளம்பரம் செய்கிறது பாஜக.

நான்காண்டு ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் படி எந்த சாதனையையுமே நரேந்திர மோடி செய்யவில்லை. அதனால், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் செய்த சாதனையை இப்போது விளம்பரம் செய்துகொண்டிருக்கிறது பாஜக.

நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன்பாகவே ஒழிக்கப்பட்டுவிட்ட போலியோவை, நரேந்திர மோடிதான் ஒழித்தார் என்று இப்போது விளம்பரம் செய்ய பாஜகவுக்கு கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா? எதற்கு இந்த வெட்கம் கெட்ட பிழைப்பு?

குறிப்புகள்:

1. உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டு: 27.09.2007
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தனிப்பட்ட ஆர்வத்தால் இந்தியாவில் போலியோ ஒழிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தலைவர் பாராட்டுக்கடிதம் எழுதினார். அவருக்கு ரோட்டரி பன்னாட்டு அமைப்பின் மூலம் போலியோ ஒழிப்பு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. http://pib.nic.in/newsite/erelcontent.aspx?relid=31485

2. இந்தியாவில் போலியோ ஒழிந்துவிட்டதாக பிரகடனம்: 27.03.2014
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதிவி ஏற்பதற்கு முன்பாகவே, 27.03.2014 ஆம் நாள், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் போலியோ ஒழிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அப்போதைய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் சான்றிதழை அளித்தது. http://indianexpress.com/…/india-officially-declared-polio…/

3. மருத்துவர் அன்புமணிக்கு ஜனாதிபதி பாராட்டு: 29.03.2014
இந்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது போலியோ ஒழிப்புக்காக உழைத்ததை பாராட்டி, ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு பரிசளித்தார். http://www.pib.gov.in/newsite/photoright.aspx?phid=53467

4. போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பின்னரே நரேந்திர மோடி பிரதமர் ஆனார்: 26.05.2014
உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் போலியோ ஒழிந்துவிட்டதாக 27.03.2014-ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இரண்டு மாதங்களுக்கு பின்னர்தான் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 26.05.2014-ல் பதவியேற்றார்.

– அருள்ரத்தினம்

Leave a Response