மெர்சல் சிறப்புக்காட்சி எதற்காக ? – விஜய்யை வெளுக்கும் பேராசிரியர்

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரிய சான்றிதழ் கிடைக்காததால் அப்படம் தீபாவளியன்று வெளியாவதில் சிக்கல் என்றவுடன், நடிகர் விஜய் தமிழக முதல்வரைச் சந்திக்கிறார். அதன்பின் அப்படத்துக்கான சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்நிகழ்வு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது. இது தொடர்பாக பேராசிரியர் ராஜநாயகம் கூறியிருப்பதாவது…..

இளைய தளபதி – “ஆளப்போறான்”/ர்!

தமிழகத்தையே காவு வாங்கிக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலை உடனடியாகக் கட்டுப்படுத்தவும்
நிலவேம்பு, பப்பாளி கஷாயங்களை வீடுவீடாக இலவசமாக விநியோகிக்கவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தன்னுடைய பங்களிப்பாக ‘முதல் நாள், முதல் காட்சி’ வருமானத்தை வழங்க வாக்களித்துள்ளார்.

தீபாவளிவரை காத்திருந்து தியேட்டரில் ரசிகர்களின் கூச்சலுக்கிடையே படம் பார்ப்பது இயலாத காரியம் என்பதால்தான் விலங்குகள் நலவாரியத்தினருக்கு இன்று சிறப்புக்காட்சி நடக்கிறதே அன்றி, முதல்வர் சந்திப்புக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

“ஆளப்போறான் தமிழன்…”
அந்தத் “தமிழன்” ஆட்சியின் லட்சணம், ரிலீஸ் அன்று நடப்பது கொள்ளையா வெள்ளையா என்பதில் தெரிந்துவிடும்…

மெர்சல்

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response