விஜய் இந்த சாதியைச் சேர்ந்தவரா? -புதிய சுவரொட்டியால் பரபரப்பு

விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளைத்தாண்டி தீபாவளி நாளான அக்டோபர் 18 அன்று வெளியாவது உறுதியாகிவிட்டது.

அப்படம் தாமதமானது, நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்தது, அதன்பின்னர் வாராவாரம் புதன்கிழமை கூட வேண்டிய விலங்குகள் நல வாரியக்குழு திங்கட்கிழ்மையான இன்றே கூடியது என நிறைய சர்ச்சைகள்.

இவற்றையெல்லாம் தோற்கடிக்கும் விதமாக, விஜய் பிள்ளைமார் சாதியைச் சேர்ந்தவர் என்றும், எங்கள் வம்சத்தைச் சேர்ந்த வீரத்தமிழன் விஜய் வெற்றி பெற வாழ்த்துகள் என்றும் சுவரொட்டிகள் நடமாடுகின்றன.

இதனாலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும் அந்த குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்துடனும் சுற்றித்திரிகின்றனராம்.

Leave a Response