​”லிங்கா​”​​அமரன்​.

உலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படமான
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம்  “லிங்கா”.  இத்திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கலை இயக்குனர் அமரன் அவர்கள்.
பத்து வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பஞ்சதந்திரம் படத்தில் சாபுசிரில் அவர்களின் உதவி கலை இயக்குனராக பணியாற்றியவர். தற்போது மீண்டும் பத்து வருடங்களுக்கு பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  லிங்கா படத்தில் பணியாற்றியது மிகுந்த பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று கூறுகிறார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பழகியது மறக்க முடியாதது என்றும்

​      ரஜினிகாந்த் அவர்கள் மிகுந்த எளிமையுடன் நெருங்கிய நண்பரைப்போல் பழகினார் என்றும் கூறிய அவர் ​ தனக்கு இந்த அரிய வாய்ப்பினை அளித்த இயக்குனர்  கே.எஸ்.ரவிக்குமார்
​ மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்​

அவர்களுக்கும் இவை அனைத்திற்கும் காரணமான தனது குருநாதரும்

 லிங்கா படத்தின் production designerருமான

சாபுசிரிலுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார்

​     அமரன் திருச்சி ​மண்டல பொறியியல் கல்லூரியில் கட்டிட வரைபட கலை (B Arch) முடித்துவிட்டு மும்பை IIT யில்  Master of  Designing படித்தார். அங்கு சாபுசிரில் அவர்களை சந்தித்து சாபுசிரிலிடம் உதவி கலை இயக்குனராக பணி புரிந்தார்.  அவரிடம் இரண்டு வருடங்கள்  பஞ்சதந்திரம், லேசா லேசா, பாய்ஸ், குஷி (இந்தி ) படங்களில் பணியாற்றினார். கலை இயக்கம் பற்றிய அனைத்தையும் சாபுசிரிலிடமே பயின்றதாகவும் தன் சினிமா வாழ்வின் உயரங்களுக்கு சாபுசிரில் அவர்களே காரணம் என்றும் கூறுகிறார்.
      அமரன் அவர்கள்   “ஜித்தன்” படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் தனியாக படம் இயக்கியபோது சித்திரம் பேசுதடி படத்தில் கலை இயக்கம் செய்த அவர் மிஷ்கினின் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் படங்களில் தொடர்ச்சியாக கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிஷ்கின் அவர்கள் தன் திரை வாழ்வில் மட்டுமின்றி தன் சொந்த வாழ்விலும் மிகுந்த முக்கியமானவரும் நெருங்கிய நண்பரும் ஆவார் என்று கூறுகிறார்.
        தற்போது அமரன் அவர்கள் நடிகர் ஆதி நடிப்பில் அவர் அண்ணன் சத்ய பிரபா இயக்கத்தில்அவர் தந்தை ரவி ராஜா பின்ஷெட்டி தயாரிப்பில்  “யாகா வராயினும் நாகாக்க”  படத்திlலும் பணியாற்றி வருகிறார்.
               அமரன் அவர்கள் தன்  சினிமா வாழ்வில் உச்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும்  “லிங்கா”. படத்தில்  பணியாற்றி வருகிறார்.    அவர் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள்.


Leave a Response