நாம் தமிழர் கட்சிக்கு இரண்டு பக்கமும் அடி

கடந்த அக்டோபர் 30 அன்று  நடந்த பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவேந்தலின் காரணமாக நாம்தமிழர்கட்சி விமரிசனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. அது பற்றி அக்கட்சியைச் சேர்ந்த மருதநாயகம் எழுதியது….

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் குருபூஜைக்கு நாம் தமிழர் கட்சியினர் பதாகை, போஸ்டர், முகப்பு படம் ஆகியவற்றில் ‘தேவர்’ என சேர்க்காமல் ‘பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கனார்’ என குறிப்பிட்டு கடந்த ஆண்டு வைத்திருந்தோம். அதைக் கண்டு அவரை நாங்கள் அவமதித்துவிட்டதாக ஒரு சாதிக் கும்பலும், அவருக்கு எப்படி நீங்கள் மரியாதை செலுத்தலாம்? என கேட்டு மற்றொரு சாதிக் கும்பலும் சண்டைக்கு வந்தார்கள். தமிழர்களுக்குள் நல்லிணக்கத்தை உருவாக்க நாங்கள் எந்த பெருந்தமிழரையும் சாதிப் பெயரோடு அடையாளப்படுத்துவதில்லை என சொல்லியும் அதில் ஒரு கும்பல் எங்களை தரக்குறைவாக இன்று வரை பேசியும் ஏசியும் வருகிறது. சாதிய அடையாளங்களை தாண்டி தமிழின அடையாளத்தோடு அனைத்து தமிழரையும் மரியாதை செலுத்த வைக்கவேண்டும் என்பதே எங்கள் தெளிவான வெளிப்படையான எண்ணம். இதை புரிந்து கொள்ளாமல் படித்து இளைஞர்கள் குறுகிய சாதிய எண்ணத்தோடும் வன்மத்தோடும் பேசுவது சகிக்கவில்லை. வேற்று இன/மொழி சினிமா நடிகர்களின் ஆளுயர படங்களோடு சேர்த்து தேவரய்யாவுக்கு பரமக்குடியில் பதாகையும் போஸ்டரும் அடித்து வைக்கும் உங்க சாதிவெறி கும்பலிடமிருந்து முதலில் அவரையும் அவரது மரியாதையும் காப்பாற்ற வேண்டிய நிலைதான் இங்கு இருக்கிறது. பெருந்தமிழர் என்பது இழிவல்ல, கண்ட கண்ட வந்தேறி நாய்களோடு அவரது படத்தை போடும் உங்க சினிமா மோக சாதிவெறிக் கும்பலின் செயல்தான் இழிவானது…

# சாதிப்பெயரை தவிர்த்து ‘பெருந்தமிழர்’ என அழைப்பதே நம் இனத்தின் ஆளுமைகளுக்கு நாம் செய்யும் சரியான மரியாதை. எவன் எதிர்த்தாலும் நாங்கள் எங்கள் பாதையில் எங்கள் எண்ணம் போல சரியாக பயணிப்போம்…

Leave a Response