களவாணி- 2 படம் சம்பந்தமாக நடிகர் விமல் விளக்கம்

தினத்தந்தி நாளேட்டில், விமல், ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற ‘களவாணி’ படத்தை நசீர் தயாரிக்க, சற்குணம் டைரக்டு செய்திருந்தார். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.

முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு, திருமுருகன் உள்பட அத்தனை நடிகர்–நடிகைகளும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். சற்குணம் டைரக்டு செய்கிறார். ஷெர்லி பிலிம்ஸ் சார்பில் நசீர் தயாரிக்கிறார்.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற தஞ்சை சுற்றுவட்டாரங்களில், அடுத்த மாதம் (அக்டோபர்) படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு மறுப்புத் தெரிவித்து நடிகர் விமல், செய்திக்குறிப்பொன்றை அனுப்பியுள்ளார். அதில்,

மறுப்புச்செய்தி :

இன்றைய நாளிதழ் ஒன்றில் செர்லி மூவீஸ் நஷீர் தயாரிப்பில் களவாணி – 2 என்ற படத்தில் நான் கதாநாயகனாக நடிப்பதாகவும், அந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். இதை நான் மறுக்கிறேன். செர்லி மூவீஸ் நஷீருக்கு நான் எந்த தருணத்திலும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. அவருடையை தயாரிப்பில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எனவே இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
N.விமல்

இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

Leave a Response