பிக்பாஸ் 2 வெற்றியாளர் ஒரு பெண்தான்

பிக்பாஸ் 2 வீட்டுக்கு பிக்பாஸ் 1ஐச் சேர்ந்தவர்கள், சமீபத்தில் வந்தார்கள். சினேகன், வையாபுரி, ஆர்த்தி, காயத்ரி ரகுராம், சுஜா என ஐந்துபேர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தார்கள்.பிறகு ஆரவ்வும் வந்தார்.
பிக்பாஸ் 1 வீட்டைச் சேர்ந்தவர்கள் வந்ததால், பிக்பாஸ் 2 டீம் ஒற்றுமையானது. ஆனாலும் ஜனனியையும் பாலாஜியையும் தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு, சில விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

பிறகு ஒருவழியாக, அந்த வாரத்தின் நிறைவில், கமல் வரும் போது, எல்லோரிடமும் சந்தோஷமாகப் பேசினார். அப்போது, பிக்பாஸ் 2 வீட்டைச் சேர்ந்த பலரும், காயத்ரி ரகுராம் ரொம்பவே மாறிவிட்டார்கள் என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தனர்.

முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நல்ல மாற்றங்கள் தெரிகின்றன என்று தெரிவித்தார்கள். பிறகு எல்லோரும் உற்சாகமாக விளையாடுங்கள். வெளியே வந்ததும் பார்ப்போம் என்று சொல்லிக் கிளம்பினார்கள்.

பிக்பாஸ் 2 வீட்டில் உள்ளவர்கள், நாளொரு டார்ச்சர் டாஸ்க்கும் பொழுதொரு வலியுமாகக் கொண்டு, அதேசமயம் உற்சாகமாக விளையாடி வருகிறார்கள்.

இதையடுத்து, இப்போது காயத்ரி ரகுராம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், பிக்பாஸ் 2 குழுவினருக்கு தகவலொன்றைத் தெரிவித்துள்ளார்.

அந்த டிவிட்டரில், நீங்கள் அனைவரும் சிரிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த டாஸ்க்கையும் விட்டு விடாதீர்கள் பெண்களே. நியாயமாக விளையாடுங்கள். உற்சாகத்தை கைவிடாதீர்கள். உங்களுக்காக விளையாடுங்கள். உங்கள் நண்பர்களைச் சார்ந்து இருக்காதீர்கள்’ என்று ட்விட்டரில் பதிந்துள்ளார்.

ஏனோ தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒட்டுமொத்த பெண்களுக்கும் அட்வைஸ் செய்த காயத்ரி ரகுராம், ஒரேயொரு ஆண்மகனாக இருக்கும் பாலாஜியைப் பற்றி குறிப்பிடவில்லை.

பெண்களில் ஒருவர்தான் பிக்பாஸ் ஆவார் என காயத்ரி ரகுராம் உறுதியாக முடிவு செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஓவியாவும் ஐஸ்வர்யா தத்தா பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Response