ஓவியா படத்துக்கு மலேசியாவில் தடை

அனிதா உதீப் என்கிற பெண்ணின் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ’90 எம்.எல்’. மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். படத்துக்கு தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியான போது, அதிலிருந்த காட்சிகள், வசனங்கள் முழுக்க ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனம் கொண்டதாகவும் இருப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் வந்தன.

அதைத் தொடர்ந்து வெளியான சில காட்சிகளிலும் ஆபாசம் அளவுக்கதிகமாக இருக்கிறதென விமர்சனங்கள்.

இந்நிலையில் இப்படத்துக்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறதாம். தமிழகத்திலிருந்து செல்லும் படங்களை அங்கு ஒரு முறை தணிக்கை செய்து வெளியிடுவார்கள்.

இங்கு தணிக்கையில் எந்த சிக்கலும் இல்லாமல் ஏ சான்றிதழ் பெற்ற 90 எம் எல் படத்துக்கு மலேசிய தணிக்கைக்குழு தடை விதித்திருக்கிறது.

இதனால் இங்கு மட்டும் எப்படி எளிதாக அப்படத்துக்குத் தணிக்கைச் சான்று கிடைத்தது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Response