மீண்டும் மலையாள சினிமாவில் நுழைந்த அமலாபால்..!


கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி இடத்தை பிடிக்கும் மலையாள நடிகைகள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு என அப்படியே ரூட்டை மாற்றி டாப் கியரில் பாலிவுட் பக்கம் தாவி விடுகின்றனர். அதன்பின் அதிக சம்பளம் தருவதாக இருந்தாலும்கூட தமிழ் சினிமா பக்கமே தலைகாட்ட யோசிக்கும் இவர்கள், அளவான சம்பளம் தரும் மலையாள சினிமாவில் நடிக்கவா ஆர்வம் காட்டப்போகிறார்கள்.?

ஆனால் ஒருசில நடிகைகள் நமக்கு நாளை சொந்த ஊரில் ஆதரவு தேவைப்படலாம் என்பதற்காக அவ்வப்போது சில மலையாள படங்களிலும் நடிப்பார்கள்.. அந்தப்பட்டியலில் ஒருவதான் அமலாபாலும். தமிழில் இப்போதும் பிசியாக நடித்துக்கொண்டு இருந்தாலும் கூட, வருடத்திற்கு ஒரு மலையாள படத்திலாவது நடித்து விடுகிறார். அந்தவகையில் தற்போது நிவின்பாளியுடன் இணைந்து ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் அமலாபால்.

Leave a Response