‘கோலிசோடா-2’வில் சமுத்திரக்கனியின் கேரக்டர் இதுதான்..!


மூன்று வருடங்களுக்கு முன் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் ‘கோலிசோடா’.. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பக்கத்தை எடுக்கும் வேளைகளில் இறங்கியுள்ளார் விஜய் மில்டன்.. இந்தப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்தப்படத்தில் சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் வேடமாம் சமுத்திரக்கனிக்கு.. எப்படி முதல் பாகத்தில் ஏடிஎம் என்று சொல்லப்பட்ட அந்தப்பெண் அனைத்து சிறுவர்களையும் ஒன்று சேர்க்க முயற்சி எடுத்தாளோ, அதேபோல இந்தப்படத்தில் சமுத்திரக்கனிக்கும் கிட்டத்தட்ட அதே வேலைதான் என்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.

Leave a Response