
விஜய் மில்டனின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘கோலி சோடா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’, ’10 எண்றதுக்குள்ள’ போன்ற திரைப்படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளாகின.
ஆனால் அந்த இரண்டு படங்களும் தொல்விப்படங்கலாகவே அமைந்தன. பொதுவாக சரிவுகளை தொடர்ந்து சந்திக்கும் இயக்குனர்கள் தாங்கள் இயக்கிய வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவக்குவது தானே வழக்கம்.. அந்தவகையில் இயக்குனர் விஜய் மில்டனும் மீண்டும் ‘கோலி சோடா 2’ பாகத்திற்கான பணிகளை துவங்கிவிட்டார்
முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடிப்பார்களா, இல்லை புதிய நட்சத்திரங்கள் பங்கு பெறுகிறார்களா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.


