
இயக்குனர் பாலாஜி சக்திவேல் விக்ரமை வைத்து ‘சாமுராய்’ என்கிற படம் மூலமாக அறிமுகமானாலும் அவர் அடுத்த இயக்கிய ‘காதல்’ படத்தின் மூலம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். தொடர்ந்து கல்லூரி, வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் லிங்குசாமியின் தயாரிப்பில் ரா.ரா.ராஜசேகர் என்கிற படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டார்.
ஆனால் லிங்குசாமிக்கு ஏற்பட்ட எதிர்பாராத நடம் காரணமாக அந்தப்படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.. கடந்த இரண்டு வருடங்களாக சரியான வாய்ப்பின்றி அமைதி காத்த பாலாஜி சக்திவேலுக்கு கைகொடுக்கும் விதமாக அவர் இயக்கும் படம் ஒன்றை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க முன்வந்துள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படத்தின் நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம்.


