‘வடகறி’ இயக்குனருக்கு கைகொடுக்கும் வெங்கட் பிரபு..!


இரண்டு வருடங்களுக்கு முன் ஜெய் ஸ்வாதி நடிப்பில் வெளியான படம் ‘வடகறி’. இந்தப்படத்தை சரவணராஜன் என்பவர் இயக்கினார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் கூட. ‘வடகறி’ படத்துக்குப்பின் படம் ஏதும் இல்லாமல் இருந்தார் சரவணராஜன்.

தற்போது இவருக்கு கைகொடுக்கும் விதமாக புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார் வெங்கட்பிரபு.. இந்தப்படத்தின் புரமோஷனுக்காக, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார் என்பதை, தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ட்விட்டரில் ஒரு வாரத்துக்கு அறிவிக்கப் போகிறாராம் வெங்கட் பிரபு.

Leave a Response