மாட்டிறைச்சி தடை – முடிவுக்கு வருகிறது மோடியின் ஆட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இறைச்சிக்காக எருமை மாடு, பசு, காளை, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கான தடை அமலுக்கு வருகிறது. விவசாயக் காரணங்களுக்காக மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்தது மத்திய அரசு. இருவர் முறையில் மாடுகளை விற்பவர்களுக்கும், வாங்கும் விவசாயிகளுக்கும் கூட அடையாளம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் தலைவர்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேஸ்புக் பதிவிட்டுள்ளதாவது:’ மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் இந்த முடிவு நாகரீகமற்ற முடிவு. இந்த முடிவு இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிக்கும் நடவடிக்கை. தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்டால், நாளை மீன் சாப்பிடக் கூடாது என்று சட்டம் கொண்டு வருவார்கள். மக்கள் இதற்கு எதிராக போராட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் உட்பட பெரும்பாலான அரசியல்தலைவர்கள் இம்முடிவைத் திரும்பப் பெறவேண்டும் என்கின்றனர்.

2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது தமிழகத்தில் ஆடு, கோழிகள் வெட்டத் தடை கொண்டுவந்தார். அடுத்த ஆண்டு (2004) வந்த நாடாளுமன்றத்தேர்தலில் 40 இடங்களிலும் தோல்வி அடைந்தார். அதன்பின் அச்சட்டத்தை விலக்கிக் கொண்டார்,

அது போலவே விவசாய மற்றும் அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் மட்டுமின்றி பண்பாட்டு உரிமைகளையும் பறிக்கும் இச்செயல் மூலம் பாஜக அரசு முடிவை நோக்கிச் செல்கிறது என்று பலரும் சொல்கிறார்கள்.

Leave a Response