
சசி இயக்கிய 555 மற்றும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படங்களின் தோல்வி காரணமாக பரத்தின் மார்க்கெட் சரிந்து விட்டது. அதனால் தற்போது கடுகு, பொட்டு, என்னோடு விளையாடு போன்ற படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சதுரங்கவேட்டை-2 படத்திலும் தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்து வருகிறார் பரத். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்த பூர்ணா மீண்டும் இணைந்துள்ளார்.
பரத்தைப் போலவே பூர்ணாவும் சமீபகாலமாக காதல் நாயகி வட்டத்தில் இருந்து வெளியேறி மாறு பட்ட கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த படத்தில் இரண்டு பேருமே இதுவரை நடிக்காத வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார்களாம். அதனால், முதலில் இணைந்து நடித்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் பரத்-பூர்ணா ஜோடிக்கு கிடைக்காத வெற்றி இந்த படத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்கிறார்கள்.


