ஸ்ரீதேவி பற்றி பேசியது குறித்து வருத்தம் தெரிவித்த ராஜமவுலி..!


மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் சிவகாமி கதாபாத்திரத்தில் தனது ஆளுமையை மிகச்சிறப்பாக நிலைநாட்டினார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.. ஆனால் இந்த கேரக்டரில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியைத்தான் அணுகியதாகவும் ஆனால் அவர் மிகப்பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டதால் தான் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணனை ஒபந்தம் செய்ததாகவும் இயக்குனர் ராஜமவுலி கூறியிருந்தார்..

ஆனால் இதற்கு ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்தார். இப்போது அதுபற்றி மீண்டும் பேச்சு வந்தபோது, தான் ஸ்ரீதேவியிடம் பேசியது, அவர் அதற்காக டிமான்ட் வைத்தது எதுவுமே பொய்யில்லை என்றும் ஆனால் ஸ்ரீதேவி பற்றி தான் பொதுவெளியில் அப்படி பேசியிருக்க கூடாது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார் ராஜமவுலி. மேலும் சமீபத்தில் வெளியாகியுள்ள ஸ்ரீதேவியின் ‘மாம்’ படத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ராஜமவுலி.

Leave a Response