தமிழகத்தில் தாமரை மலராது – இல.கணேசன் முன்னிலையில் அடித்துப் பேசிய முத்துலிங்கம்

கவிஞர் அமிர்தம்சூர்யாவின் முகநூல் பதிவு…

திரைப்படப் பாடலாசிரியர்கள் மீது எனக்கு அவ்வளவு மன இணக்கம் வருவது இல்லை.அவர்கள் அந்தத் தொழில் வித்தை தாண்டி கவிஞர்களாக இருந்தால் தேடிப் போய் நட்பாக்கிக் கொள்வேன்.

நேற்று முன் தினம் கவிதை உறவு விழாவும் அன்பிற்குரிய கவிஞர் ஏர்வாடியார் பிறந்த நாள் விழாவும் சிறந்த நூல்களுக்கு பரிசு அளிப்பு விழாவும் சேர்ந்து வாணிமகாலில் நடந்தது அரங்கம் நிறைந்த கூட்டம்.என் நூலுக்கு கவிதை உறவு பரிசு.அதெல்லாம் மேட்டர் இல்லை.

விழாவுக்கு பா.ஜ.க தலைவர் இல.கணேசன் தலைமை. அந்த விழாவில் முத்துலிங்கம்.அவர் திரைப்படப் பாடலாசிரியர் என்றே என் புத்தியில் பதிவு.அது அறியாமையாகக் கூட இருக்கலாம்.அவர் பேசும் போது கொஞ்சம் சபை நாகரீகம் மீறி பொருத்தமற்ற இடத்தில் அப்படிப் பேசியிருந்தாலும் அந்த தில்லு அந்த திமிரு வேற யாருக்கும் இருக்குமா தெரியாது.

அவர் பேசும் போது…
”ஈழத் தமிழர்களுக்கு இன்றுவரை இருக்கும் எந்த மத்திய அரசுகளும் உதவவில்லை .பா.ஜ.க உட்பட.தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைக் கொண்டு நீங்கள் காலுன்ற முடியாது ஒரு போதும். இங்கு தாமரை முளைக்காது.இல.கணேசன் முன்னிலையிலேயே இதை சொல்கிறேன்.இப்போது இல்லாவிட்டாலும் என் தலைமுறைக்குப் பிறகு தமிழ் ஈழம் மலரும்.”என்றார்.

நானும் சபை நாகரிகம் இன்றி கூட்டத்தில் எழுந்து கை தட்டி விட்டேன் முத்துலிங்கம் அசல் கவிஞன் தான் அதில் சந்தேகம் இல்லை.மேடைக்குப் போய் கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்தேன்.

முகநூலில் கத்தி சுத்தாமல் இப்படி பொதுமக்கள் கூடிய சபையில் எதிராளியை வைத்து விமர்சிக்க தனி தில்லு வேணும்மில்ல..வாழ்த்துகள் முத்துலிங்கம் ஐயாவுக்கு.

Leave a Response