மரணம் அடைந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகை விஜய் நிதி உதவி செய்தார்

அக்.29 (டி.என்.எஸ்) விஜயின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய முயற்சித்து கீழே விழுந்து உயிரிழந்த கேரள ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் விஜய் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான ’கத்தி’ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் வெளியான அன்று கேரளாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜய் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முயற்சித்து கீழே விழுந்ததில் மரணமடைந்தார். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கேரளாவில் தனது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கையில் தவறி விழுந்து இறந்த ரசிகரின் குடும்பத்திற்கு விஜய் ரூ.3 லட்சம் நிதி அளித்தார். கோவையில் ரசிகர்களை காண சென்ற விஜய் இறந்த உன்னிகிருஷ்னன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.3 லட்ச நிதி உதவி வழங்கியதோடு, “எதிர்காலம் குறித்து கவலை வேண்டாம், நான் இருக்கிறேன்” என்றும் உறுதி அளித்தாராம்.

Leave a Response