அஜித்தின் 55வது படத்தின் தலைப்பு ‘என்னை அறிந்தால்’

அக்.30 (டி.என்.எஸ்) கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருந்தாலும், அபப்டத்திற்கான தலைப்பில் நீண்ட நாட்களாக இழுபரி இருந்தது. இதனால் இப்படத்தை தல 55 என்று அஜித் ரசிகர்கள் கூறிவந்தார்கள். இதற்கிடையில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் ‘என்னை அறிந்தால்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் நாயகிகளாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடிக்கிறார்கள். இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Leave a Response