
இந்தியாவில் பத்தாம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை வீரர் லசித்மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வீரர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி பாராட்டு விழா நடந்தது.அதில், முகேஷ் அம்பானி, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும், இலங்கை அணியின் முன்னாள் வீரருமான சனத்ஜெயசூர்யா கலந்து கொண்டார்.
இவர் தற்போது அரசியலில் இருக்கிறார். தற்போதைய சிங்கள அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கட்சியில் இருக்கிறார். மும்பை வருவதற்கு சில நாட்கள் முன்பு, சிங்கள அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுடன் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். ஏப்ரல் 2 ஆம் நாள் கொழும்பில் அவ்விருந்து நடந்தது.

அதற்கடுத்து,மும்பையில் அவர் விளையாடாத ஒரு போட்டிக்காக நடக்கும் விழாவில் கலந்துகொண்டு முகேஷ் அம்பானியுடன் இருக்கிறார்.
இதனால், இது வெறும் விளையாட்டுதானா? அல்லது அரசியல் மற்றும் வியாபாரம் கலந்திருக்கிறதா? என்கிற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருக்கிறது.
