மேகதாது அணைச் சிக்கலில் நமக்குக் கேடு செய்வது கர்​நாடக அரசு அல்ல மத்​தியஅரசு – வைகோ தகவல்

நீதி​மன்ற உத்​தர​வின்​படி விருதுநகர் மாவட்​டம் சாத்​தூர் அருகே மேட்​டமலை​யில் சீமை கரு​வேல மரங்​களை
அகற்​றும் பணி நேற்று தொடங்​கியது.இந்​நிகழ்ச்​சி​யை,மதி​முக பொதுச்செய​லா​ளர் வைகோ தலைமை வகித்து தொடங்​கி​வைத்​தார்.

அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது….

மேகதாது அணை விவ​காரத்​தில் நமக்குக் கேடு விளை​விப்​பது கர்​நாடக அரசு அல்ல,மத்​தியஅரசு​தான்.2014 ஆம் ஆண்​டில் கர்​நாடக மாநிலத்​தைச் சேர்ந்த அனைத்துக் கட்​சிகளின் கூட்​டம்,அப்போதைய மத்திய அமைச்​சர் ஆனந்தகுமார் வீட்​டில் 2 நாட்​கள் நடந்​தது.அதில்,சுற்​றுச்​சூழல் துறை அமைச்​சர் ஜவடேகரும் கலந்​து​கொண்​டார்.

அப்​போது,மேகதாது அணை கட்​டி​னால் தஞ்சை மாவட்​டத்​தில் பஞ்​சம் ஏற்​படும் எனக்கூறி,அப்​போதே நான் எதிர்த்​தேன்.

ஒருமாத கால தவெக ஆட்சி அரு​மையாக உள்​ளது.

பெண்களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்கள் காலம்​கால​மாக எல்லா ஆட்​சிகளி​லும் நடை​பெற்று வரு​கிறது.இதுபோன்ற சம்​பவங்​களில் ஈடு​படு​பவர்​கள் வாழ்​நாள் முழு​வதும் சிறை​யில் இருக்​கும்​படி​யான சட்​டத்தை கொண்​டுவர வேண்​டும்.

கூட்​டணி குறித்து நாங்​கள் இன்​னும் யோசிக்​கவே இல்​லை.பொதுக்​குழுவைக் கூட்ட வேண்​டும்.மிக​வும் விசு​வாசமாக இருந்து திமுக​வினரை வெற்​றி​பெறச் செய்​துள்​ளோம்.கூட்​ட​ணி​யில் உள்ள மற்​றவர்​கள் முடி​வெடுத்து ஆளும் ஆட்​சி​யில் சேர்ந்​துள்​ளார்​கள்.நாங்​கள் எந்த முடி​வும் எடுக்​க​வில்​லை.சமூகவலை​தளங்​களில் திமுக​வினர் எங்​களைக் காரணமில்​லாமல் பழிதூற்​றும் செயலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.நாங்​கள் அதைப்பற்றிக்
கவலைப்​பட​வில்​லை.வரும் 27 ஆம் தேதி பொதுக்​குழு​வில் ஆலோ​சித்து எங்​களது நிலைப்​பாட்டை அறி​விப்​போம்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

Leave a Response