புதுச்சேரி தேர்தல் முடிவுகள் – விவரம்

புதுச்​சேரி​யில் புதுச்​சேரி, காரைக்​கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்​தி​யங்​கள் உள்​ளன. இதற்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 9 ஆம் தேதி நடை​பெற்​றது.

அங்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​கும் இந்தியா கூட்​ட​ணிக்​கும் இடையே கடும்போட்டி நில​வியது.
என்​டிஏ கூட்​ட​ணி​யில் என்​.ஆர்​.​காங்​கிரசு, பாஜக, அதி​முக, புதி​தாக உரு​வான இலட்​சிய ஜனநாயகக் கட்சி
உள்​ளிட்​டவை இடம்​பெற்​றன.

இந்தியா கூட்​ட​ணி​யில் காங்​கிரசு – திமுக இடையே ஏற்​பட்ட மோதலால் தொடக்​கம் முதலே பெரும் குழப்​பம்
நில​வியது. திமுக போட்​டி​யிட்ட 5 தொகு​தி​களில் காங்​கிரசு வேட்​பாளர்​களும் நிறுத்​தப்​பட்​டனர்.இடது​சா​ரி​கள்
தனித்​துப் போட்​டி​யிட்​டன.விசிக​வுக்கு ஒதுக்​கிய தொகு​தி​யில் காங்​கிரசு, இடது​சா​ரி​கள் போட்​டி​யிட்​டன.

இந்​நிலை​யில், புதுச்​சேரியில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டன.புதுச்​சேரி​யில் தொடக்​கம் முதலே
என்​டிஏ கூட்​டணி முன்​னிலை வகித்​தது.

முதல்சுற்றில் 17 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டன.இதில்தட்​டாஞ்​சாவடி​யில் என்​.ஆர்​.​காங்​கிரசு நிறு​வனர் இரங்​க​சாமி,முத்​தி​யால்​பேட்​டை​யில் வையாபுரி மணி​கண்​டன்,ஏனாமில் மல்​லாடி கிருஷ்ணா​ராவ்,
அரி​யாங்​குப்​பத்​தில் அய்​யப்​பன்,நெட்​டப்​பாக்​கத்​தில் பேர​வைத் துணைத்தலை​வர் ராஜவேலு,வில்​லியனூரில்
இரவிக்​கு​மார்,ஏம்​பலத்​தில் மோகன் தாஸ்,காரைக்​கால் வடக்​கில் அமைச்​சர் திரு​முரு​கன்,லாஸ்​பேட்​டை​யில்
சிவக்​கொழுந்து ஆகியோர் வென்றனர்.

மண்​ணாடிப்​பட்​டில் பாஜக வேட்​பாளர் அமைச்​சர் நமச்​சி​வா​யம்,நிரவி டி.ஆர்​.பட்​டிணத்​தில் மீனாட்சி சுந்​தரம் ஆகியோர் வென்​றனர்.உப்​பளம் தொகு​தி​யில் அதி​முக மாநிலச் செய​லா​ளர் அன்​பழகன் வென்​றார்.காங்​கிரசுக்
கட்​சி​யில் ஊசுடு தொகு​தி​யில் கார்த்​தி​கேயன் வென்​றார்.நெல்​லித்​தோப்​பில் திமுக வேட்​பாளர் கார்த்​தி​கேயன்
வென்​றார்.

சுயேச்சை​களில் மாஹே​யில் அசோக்​கு​மார், நெடுங்​காட்​டில் விக்​னேஷ்வரன்,கதிர்​காமத்​தில்
அழகு(எ)அழகானந்​தம் ஆகியோர் வென்​றனர்.

இதைத்​தொடர்ந்து 2 ஆவது சுற்று வாக்கு எண்​ணிக்கை 13 தொகு​தி​களில் நடைபெற்றது.அதி​லும் என்​டிஏ
கூட்​ட​ணியே முன்​னிலை பெற்​றது.இக்​கூட்​ட​ணி​யில் என்​.ஆர்.காங்​கிரசில் மங்​கலம் தொகு​தி​யில் இரங்​க​சாமி, உழவர் கரை​யில் நாராயண​சாமி,இந்​திரா நகரில் ஏகேடி ஆறு​முகம் வெற்றி பெற்​றனர்.பாஜக​வில்
முதலி​யார்பேட்​டை​யில் ஜான்​கு​மார்,திருநள்​ளாறில் ஜிஎன்​எஸ் ராஜசேகரன் ஆகியோர் வெற்றி பெற்​றனர்.காம​ராஜ் நகரில் லஜக தலை​வர் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் வென்​றார்.முதலமைச்சர் இரங்​க​சாமி தட்​டாஞ்​சாவடி, மங்​கலம் ஆகிய இரு தொகு​தி​களி​லும் வென்​றுள்​ளார்.

இந்தியா கூட்​ட​ணி​யில் திமுக​வில் காரைக்​கால் தெற்​கில் நாஜிம், பாகூரில் செந்​தில்​கு​மார், காலாப்​பட்​டில் செந்​தில், ராஜ்பவனில் விக்​னேஷ் கண்​ணன் ஆகியோர் வென்​றனர்.

மணவெளி தொகு​தி​யில் இராமு,திரு​புவனை​யில் சாய் சரவணன் ஜெ குமார் ஆகியோர் தவெக சார்​பில்
போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றனர்.தவெக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள நேயம் மக்​கள் கழகத்​தின் தலை​வர் நேரு உருளை​யன்​பேட்​டை​யில் வெற்றி பெற்​றார்.

என்​.ஆர்​.​காங்​கிரசு 12, பாஜக 4, அதி​முக 1, லஜக 1 என 18 தொகு​தி​களில் வெற்றி பெற்​றதன் மூலம் மீண்​டும்
என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​யமைக்​கிறது.கூட்​டணித் தலை​வர் இரங்​க​சாமி 5 ஆவது முறை​யாக முதல்மைச்சராகிறார்.

திமுக 5 தொகு​தி​களில் வெற்றி பெற்று எதிர்க்​கட்​சி​யாகிறது. காங்​கிரசு ஒரு இடத்​தில் மட்​டுமே வென்​றுள்​ளது. வெற்றி பெற்ற 3 சுயேச்​சைகளில் 2 பேர் என்​டிஏ கூட்​ட​ணிக்கு நெருக்​க​மானவர்​கள்.அதனால் இக்​கூட்​ட​ணிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்​புள்​ளது.

Leave a Response