கலைஞர் கருணாநிதி மறைந்தார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை ஜூலை 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். அவர் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகியது. அகில இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், கேரள ஆந்திரா, மாநில முதல்வர்கள், திரை உலக பிரபலங்கள் என காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து சென்றனர்

இந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு காவேரி மருத்துவமனை சார்பில் 7-வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும். கடந்த சில மணிநேரஙகளில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. முடிந்தவரை அவருக்கு சிகிச்சை அளிக்கபட்ட போதிலும் அவரது உடலின் முக்கிய உறுப்புகள் செயல் இழந்து வருகிறது என கூறப்பட்டது.

இந்நிலையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 94. இன்று மாலை 6:10 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது என காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Leave a Response