
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்தார் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
நாட்டில் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவுச் செய்தியைக் கேட்டு துயரமடைந்தேன். இந்தியாவின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. அவசர நிலைக்கு கருணாநிதியின் வலுவான எதிர்ப்பு எப்போதும் நினைவு கூறப்படும்.அவரது ஆன்மா சாந்திடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
