
நடிகை ஷிவதா நாயர் திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக்கொள்வார் என நினைத்தால் முன்னைவிட பிசியாக நடித்து வருகிறார் நெடுஞ்சாலை புகழ் ஷிவதா நாயர்.. அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்றால் அந்தப்படத்தில் நிச்சயம் அவரது கேரக்டரில் வித்தியாசம் இருக்கும் என்பதையும் தொடர்ந்து நிரூபித்துவருகிறார். அதே கண்கள் படத்தில் அவரது வில்லி அவதாரம் அதற்கு ஒரு சாம்பிள்..
அந்தவகையில் தற்போது குஞ்சாக்கோ போபனுடன் மலையாளத்தில் ‘சிகாரி சாம்பு’ படத்திலும் இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம். படத்தில் அவரது தோற்றமே இந்தப்படத்தில் புதிதாக தெரிகிறது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இந்தப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


