6 ஆண்டுகளில் 15 படங்கள், எண்ணிக்கை குறைந்தது ஏன்? – மனம் திறக்கும் இசையமைப்பாளர் சி. சத்யா

மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் சி.சத்யா.

அதைத் தொடர்ந்து, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலைப் பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் சி.சத்யா.

திரையுலகுக்கு வந்து 6 ஆண்டுகள் கடந்த சி.சத்யா இதுவரை 15 படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார்.

எண்ணிக்கை மிகவும் குறைவா இருக்கே? என்று கேட்டால்,

நான் இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் நான் மட்டுமே மெனக்கெட்டு அவுட்புட் கொடுக்கவேண்டும் என நினைப்பேன் அதுதான் என் பலமும் என்கிறார்.

அதனால்தான், இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது.

உங்களுக்குள்ள நல்ல திறமை இருக்கே டக்கு டக்குன்னு அடுத்தடுத்த படங்களை புக் செஞ்சிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியது என்று கேட்டால்,

நீங்க சொல்றதும் சரிதான், கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் பட வாய்ப்பும் எனக்கு வந்துச்சு, படத்துல கமிட் ஆகுறது விஷயமில்ல, ஆனால் சரியான நேரத்துல பாடல்களும், பின்னணி இசையும் என்னால தர முடியுமான்னு ஒரு யோசனை வந்துட்டே இருந்தது. இதனால் பல படங்களை நான் தவிர்த்துவிட்டேன். ஆனா இனி என்னுடைய வேலையை இன்னும் வேகமாக்கியுள்ளேன். இதனால் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு சரியான நேரத்தில் என்னால் அவுட்புட் தர முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சத்யா.

தற்போது விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடித்துக் கொண்டிருக்கும் ”பக்கா” படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெரும்பாலான பகுதி திருவிழா செட்டப் இருப்பது போலவே இருக்கும். இதுவரைக்கும் பல கரகாட்டப் பாடல்கள் தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீங்க. ஆனால் பக்கா படத்தில் ஒரு கரகாட்டப் பாடல் இருக்கு அது முற்றிலும் மாறுபட்ட புதுவித அனுபவத்தை தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்யா.

அண்மையில் வெளியான பயமா இருக்கு படத்தில் வரும் மயிலு பாடல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் சி.சத்யா, இனி இது இடைவெளியின்றி தொடரும் என்கிறார். வாழ்த்துகள்.

Leave a Response