மீண்டும் ‘பக்கா’வாக ஜோடி சேர்ந்த விக்ரம் பிரபு – நிக்கி கல்ராணி..!


விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் நெருப்புதா. இதில் விக்ரம் பிறப்பு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது கதாநாயகனாக நடித்துவரும் ‘பக்கா’ என்கிற படத்திலும் நிக்கிகல்ராணி ஜோடியாக நடிக்கிறார். கூடவே பிந்துமாதவியும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, வையாபுரி, இமான் அண்ணாச்சி என காமெடி பட்டாளமே இதில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடிக்கிறார்.

திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம்பிரபு கிரிக்கெட் ரசிகரான இவர் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன். அதேபோல ரஜினிகாந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா என்கிற கேரக்டரில் நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியாவாக பிந்து மாதவி நடிக்கிறார். இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான பக்கா படம். நம்மால் மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்குமாம்..

இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டி, குற்றாலம், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது.

Leave a Response