விஷாலின் இரும்புத்திரை பொங்கலில் விலகுகிறது..!

மிஷ்கின் டைரக்சனில் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன்’ படம் சமீபத்தில் வெளியானது. டிடெக்டிவ் கதையை கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் சொல்லியதால் ஓரளவு வரவேற்புடன் இந்தப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.. இதை தொடர்ந்து தற்போது லிங்குசாமி டைரக்சனில் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்..

அதேசமயம் இந்தப்படத்திற்கு முன், அதாவது துப்பறிவாளனுக்கு அவர் நடித்துள்ள படமான ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்தை மித்ரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் 2018ல் பொங்கல் ரிலீஸாக வெளியாக இருக்கிறது.

Leave a Response