ஜெய் படத்திற்கு பிறந்தது விடிவு காலம்..!


‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. அதையடுத்து ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தில் அஞ்சலி ஒரு கெஸ்ட் ரோலில் ஜெய்யுடன் நடித்தார். தற்போது ‘பலூன்’ படத்தில் மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஹாரர் காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெய்- & அஞ்சலி ஜோடியுடன் ஜனனி அய்யரும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த படம், கடந்த செப்டம்பர் 27-ம் தேதியே வெளியாக இருந்தது. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நாயகனாக நடித்த ‘ஸ்பைடர்’ அப்போது வெளியானதால் தியேட்டர் கிடைக்காத காரணத்தால் ‘பலூன்’ வெளியாக தாமதமானது. இந்த நிலையில், தற்போது நியூ இயர் ஸ்பெசலாக டிசம்பர் 29-ம் தேதி ‘பலூன்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

Leave a Response