இந்தியை வென்றது தமிழ் – இணையதள ஆய்வு முடிவு அறிவிப்பு

அரசியல் சட்டத்தில் இருக்கும் இந்தியஒன்றியம் என்பதை மாற்றி இந்திய அரசு என்று மாற்றப் போராடிக்கொண்டிருக்கும் மோடி அரசின், ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்கிற கோட்பாட்டிற்கு வேட்டுவைக்கும் ஆய்வு முடிவு ஒன்றினை KPMG & Google நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

இந்தி மொழியை விட தமிழ் மொழிதான் இணையத்தில் அதிகம் பயன்படுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் இந்திய மொழிகளின் மூலமாக 23 கோடி பேர் இணையத்தை பயன்படுத்தியுள்ளனர். இது 2021-ல் 54 கோடி பேராக அதிகரிக்கும்.

இந்திய மொழிகளில் தமிழ் மொழிதான் மிக அதிகமாக இணையப் பயன்பாட்டில் இருப்பதாகவும் (42%), இதற்கு அடுத்த இடத்தில் இந்தி மொழி (39%) இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல், அடுத்த 5 ஆண்டுகளில் “தமிழ், கன்னடம், தெலுங்கு” ஆகிய தென் மொழிகள்தான் இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் அதிகம் இருக்கும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது!

இந்த ஆய்வு முடிவைப் பார்த்து வயிறெரிந்து, இணையத்தில் தமிழுக்குப் பதிலாக இந்தியைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று மோடி சட்டம் போட்டாலும் வியப்பதற்கில்லை.

ஆனாலும் ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பதுதான் உண்மை. தமிழ்தான் அந்த ஆதவன்.

Leave a Response