‘சந்தீப்புக்கு ‘மாநகரம்’ கொடுத்த வெற்றி மாயவனிலும் தொடருமா..?


மாநகரம்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாயவன். பல வெற்றிப் படங்களை தயரித்து வழங்கிய சி.வி.குமார் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ‘மாயவன்’ படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக லாவண்யா த்ரிபாதி நடித்திருக்கிறார்.

இந்தப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவருடைய வாழ்க்கைப் பின்னணியில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்களை கொண்ட கதையாம் இது. மாநகரம் படத்தைப்போல இந்தப்படம் சந்திப்புக்கு இன்னும் கொஞ்சம் இமேஜை கூட்டுமா என்பது தெரியவில்லை.

‘மாயவன்’ படத்தின் பாடல்களை வருகிற 17-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃபும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை கோபி அமர்நாத் கவனித்துள்ளார்..

Leave a Response