தயாரிப்பாளர் சி.வி.குமார் நாட்களை கடத்துவது சரிதானா..?


வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது, திறமையான இயக்குனர்களை, நடிகர்களை அறிமுகப்படுத்துவது ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம்வந்த சி.வி.குமார் தற்போது ‘மாயவன்’ படம் மூலம் இயக்குனராகவும் மாறிவிட்டார்.. இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் மாநகரம் புகழ் சந்தீப். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சந்தீப்..

அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். தனது ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனில் இருந்து இந்தமுறை ஜிப்ரானுக்கு மாறியுள்ளார் சி.வி.குமார்.. படத்தின் எடிட்டர் வழக்கம் போல லியோ ஜான்பால் தான். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படம் தயாராகியும் கூட சில மாதங்களாக ரிலீசாகாமல் இருக்கிறது.

இந்தப்படத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். விஐபி-2, பொதுவாக எம்மனசு தங்கம் என இரண்டு பெரிய படங்கள் அதே தேதியில் ரிலீஸ் ஆனதால், 'மாயவன்' படத்தின் ரிலீஸை செப்1-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் செப்-1 ஆம் தேதியும் மாயவன் படம் ரிலீஸ் ஆகவில்லை.

மாயவன் படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதற்கு ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அதிகப்படியான படங்களின் எண்ணிக்கை தான் காரணம் என சொல்லப்படுகிறது. எப்படிப்பார்த்தாலும் பெரிய படங்கள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கும். நல்ல படங்களை தயாரித்துவரும் சி.வி.குமார், தான் இயக்கிய படத்தை மட்டும் ரிலீஸ் செய்ய இவ்வளவு தயக்கம் காட்டலாமா..?

Leave a Response