டைட்டிலை திடீரென மாற்றினார் சுசீந்திரன்..!


தற்போது ‘அறம் செய்து பழகு’ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார் சுசீந்திரன். இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக விக்ராந்தும், இன்னொரு கதாநாயகனாக சந்தீப்பும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இதில் சந்தீப்புக்கு ஜோடியாக ‘கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹ்ரீன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். சுசீந்திரனுடன் நல்ல நட்புறவில் இருக்கும் டி.இமான் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் ஈடுபட்டிருந்த சுசீந்திரனுக்கு இன்னும் கொஞ்சம் துடிப்பான பொருத்தமான டைட்டிலை வைக்கலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டது.. அதன்படி இந்தப்படத்தின் டைட்டிலை ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என மாற்றி அதை இன்று மாலை தனது தந்தை மூலமாக அறிவித்துள்ளார் சுசீந்திரன்.

Leave a Response