பெண்ணின் பெயரில் படத்தலைப்பு வைத்தார் சுசீந்திரன்..!


கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன் அதில் முதலில் ரிலீசாக தயாராக இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இந்தப் படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சுசீந்திரன் சப்தமில்லாமல் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்..

இந்தப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் தான் நடிக்கின்றனர் என்றாலும் காமெடி நடிகர் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து விட்டது. மீதி கால்வாசி படப்பிடிப்பை அக்டோபர் மாதம் முடிக்க இருக்கிறார் சுசீந்திரன்.

இந்தப்படத்திற்கு ஒரு பெண்ணின் பெயரைத்தான் தலைப்பாக வைக்கப்போகிறேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார் சுசீந்திரன். அந்தவகையில் இப்படத்திற்கு ஏஞ்சலினா என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தின் தலைப்பை அவரது பெற்றோர்களை வைத்தே அறிவிப்பு செய்தும் உள்ளார்.

Leave a Response