சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்..!


சமீபத்தில் வெளியான விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தை பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தந்த விஷயம் என்னவென்றால், அதில் நடித்திருந்த முன்னணி காமெடி நடிகரான சூரியை ஊறுகாய் போல ஒரு சில காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தி இருந்ததுதான்.

இத்தனைக்கும் சூரியின் நட்பு வட்டாரத்தில் நடித்த மூன்று நடிகர்களுக்கு படம் முழுதும் வருமாறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தப்படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய விக்ரம், சூரியின் காட்சிகள் குறைவாக இருந்தததற்கு தானும் ஒரு காரணம் என்று கோரி சூரியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.

மேலும் அதற்கு பிராயச்சித்தமாக தனது அடுத்த படத்தில் சூரிக்கு தன்னுடன் இணைந்து படம் முழுதும் வரும்படியான கதாபாத்திரத்தை வழங்கப்போவதாகவும் கோரினார். இன்னும் ஒரு படி மேலாக சூரி கதாநயாகனாக நடிக்க நான் காமெடியனாக நடிக்கவும் தயார் என குறிப்பிட்டார் விக்ரம்.

Leave a Response