மீண்டும் ஒரு ஜாதிப்படத்தில் கௌதம் கார்த்திக்..!


சீனியர் நடிகர் கார்த்திக் மீது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்கிற அடையாளம் எப்போதுமே உண்டு. அவர் மகன் கௌதம் கார்த்திக் இப்போதுதான் வளர்ந்து வரும் நடிகர் என்றாலும், முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்தபோது இந்த சின்னவயதிலேயே இவரும் தன்மீது ஜாதி அடையாளத்தை பூசிக்கொள்கிறாரே என்கிற பேச்சு எழுந்தது.

அதன்பின் அதிலிருந்து விலகி கமர்ஷியல் படங்களில் நடித்துவரும் கௌதம் கார்த்திக், ‘தேவராட்டம்’ என்கிற படத்தில் நடிக்க இருப்பதன் மூலம் மீண்டும் பழைய பாணிக்கு திரும்புகிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இன்னொரு பக்கம் இந்தப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் ‘குட்டிப்புலி’ முத்தையா எப்போதுமே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களின் படங்களையே இயக்கிவருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response