கொடிவீரன் படக்குழுவை அதிரவைத்த பூர்ணா..!


பெரும்பாலான கதாநாயகிகள் வந்தோமா, ஹீரோவை காதலித்தோமோ, டூயட் பாடினோமா என சிம்பிளாக நடித்துவிட்டு போய்விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் தான் பத்து நிமிட காட்சிகளே வந்தாலும் கூட கேரக்டருக்காக எதையும் செய்ய துணிவார்கள்.. ‘கொடிவீரன்’ படத்தில் தனது கேரக்டருக்காக பூர்ணா செய்துள்ள அப்படிப்பட்ட ஒரு காரியம் படக்குழுவினரையே திகைக்க வைத்துள்ளது.

குட்டிப்புலி, மருது, கொம்பன் ஆகிய படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கொடிவீரன். இப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பால சரவணன் ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடிகர் பசுபதி நடிக்கிறார்.

இப்படத்துக்காக நடிகை பூர்ணா மொட்டை அடித்துள்ளார். இந்த படத்தில் பூர்ணாவின் ரோல் மிகவும் முக்கியமானது. அது வில்லி ரோலா என்பதை பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என்கிறார்கள் படக்குழுவினர்.. கொடிவீரன் படத்தின் கதைப்படி மொட்டையடித்த பின் வளர்ந்த சிறு முடிகளுடன் பூர்ணா வரவேண்டும். இப்படியொரு ரோலில் நடிக்க அவரிடம் கேட்டதும் எதிர்ப்பு எதுவும் சொல்லாமல் உடனே ஓகே சொல்லிவிட்டார் என ஆச்சர்யப்படுகிறார்கள்.

Leave a Response