
5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்
என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த நடிகர் விஜய்,ஆட்சி அமைந்ததும்,அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.50,000/- வரை மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கடுமையாக ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.
இந்நிலையில், விஜய் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட அருள் ஆறுமுகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில்…
முடியாது! முட்டுக் கொடுக்க முடியாது!
விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்தான் இந்த பாரபட்சமான கடன் தள்ளுபடி என்பது.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களே நீங்கள் வாக்குறுதி தரவில்லை உத்திரவாதம் கொடுத்தீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.
உடனடியாக சிறு குறு விவசாயிகளின் முழுக் கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள் மற்றும் பெருவிவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி செய்யுங்கள்.
உங்களுக்கு விவசாயத்தைப் பற்றித் தெரியாது IAS களின் பேச்சைக் கேட்டு இப்படி தவறான முடிவு எடுக்கக்கூடாது! இது தவெகவின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்து விடும்!
தேர்தல் வாக்குறுதிபடி செயல்படுத்துங்கள்.
தமிழக அரசிடம் பணம் இல்லை என்றால் முதலில் வாக்குறுதிபடி அறிவிப்பு கொடுத்துவிட்டு தேதி வாரியாக இரண்டு மூன்று கட்டங்களாக விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கலாம்!
இது விவசாயிகளிடம் பெறும் எதிர்மறை எண்ணத்தையே உருவாக்கும்!
தமிழக அரசே உடனடியாக உங்கள் அறிவிப்பை மாற்றி வாக்குறுதிபடி செயல்படுத்துங்கள்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
விஜய் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டவரே கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது விஜய் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.


