விஜய்யை சந்திக்க மறுத்த இராகுல் – காரணம் என்ன?

சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் மே 27 ஆம் தேதி மதி​யம் தில்லி சென்​றடைந்த விஜய்க்​கு, தமிழக அரசு விருந்​தினர் இல்​லத்​தில் தமிழகக் காவல்​துறை சார்​பில் முறைப்​படி​யான அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது. அன்​றைய தினம் மாலை 4.30 மணி​யள​வில் நாடாளு​மன்ற வளாகத்​தில் பிரதமர் நரேந்​திரமோடியை விஜய்
சந்​தித்​துப் பேசி​னார்.

பிரதமரைத் தொடர்ந்து உள்​துறை அமைச்​சர் அமித்ஷாவை விஜய் சந்​திப்​ப​தாக இருந்​தது.ஆனால்,கடைசி நேரத்​தில் அந்தச் சந்​திப்பு நடை​பெற​வில்​லை.

அதையடுத்து விஜய்,நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனைச் சந்​தித்து தமிழகத்​துக்​கான திட்​டங்​கள் குறித்து
பேச்​சுவார்த்தை நடத்​தி​னார்.

இந்​நிலை​யில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் காங்​கிரசு மூத்த தலை​வர்​களான சோனியா,இராகுல், மல்​லி​கார்​ஜூன கார்கே ஆகியோரை​யும் விஜய் சந்​திப்​பார் என்ற தகவல் வெளி​யானது.

இதனால் சோனியாவின் இல்​லத்​தைச் சுற்​றி​லும் முதல்​வர் விஜய்யை வரவேற்று பதாகைகள்
வைக்​கப்​பட்​டிருந்​தன.ஆனால் திடீரென காங்​கிரசு தலை​வர்​களு​ட​னான சந்​திப்பு இரத்​தானது.

முன்​ன​தாக, கேரளா​வின் காங்​கிரசு முதல்​வர் சதீஷன் பதவி​யேற்​கும் விழா​வில் விஜய் பங்​கேற்​ப​தாக இருந்த
திட்​டம் திடீரென இரத்​தானது.இப்போது தில்​லி​யில் காங்​கிரசு தலை​வர்​களை விஜய் சந்​திக்க இருந்த திட்​ட​மும்
இரத்​தானது இது கட்சி நிர்​வாகி​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இப்​படி​யான சூழலில் நேற்று காலை 10 மணி​யள​வில் தில்லி பயணத்தை முன்​கூட்​டியே முடித்​துக்​கொண்டு தனி விமானத்​தில் விஜய் சென்னை திரும்​பி​னார்.

காவிரி விவ​காரம் மற்​றும் தமிழகத்​தில் நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது எழுந்த குதிரைபேர சர்ச்​சைகள் போன்​றவற்​றால் இப்​போது காங்​கிரசுத் தலை​வர்​களைச் சந்​தித்​தால் அது தேவையற்ற விவாதங்​களை உரு​வாக்​கும் என்​ப​தால் விஜய் இந்​தச் சந்​திப்​பைத் தவிர்த்​த​தாக ஒருதரப்​பில் கூறப்​படு​கிறது.காங்​கிரசு தலை​வர்​களு​ட​னான
சந்​திப்பு நடை​பெறாததற்கு பின்​னணி​யில் சில அரசி​யல் அழுத்​தங்​களும் இருக்​கலாம் என்​றும் சொல்லப்படுகிறது.அதாவது காங்கிரசு தலைவர்களைச் சந்திக்கக் கூடாது என்று விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுத்ததால் அவர் சந்திப்பை இரத்து செய்தார் என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு புறம் இதற்குக் காரணம் என்ன? என்பது குறித்து காங்​கிரசு பாமஉ கிறிஸ்​டோபர் திலக் கூறிய​தாவது….

இதனை தமிழக முதல்​வர் ஒரு அரசு​முறைப் பயண​மாக மட்​டுமே வைத்​திருக்க விரும்​பி​யிருக்​கலாம்.அதனால்​தான் பிரதமரை மட்​டும் சந்​தித்​து​விட்​டுத் திரும்​பி​யுள்​ளார்.ஜூன் 11 ஆம் தேதி முதல்​வர் மீண்​டும் டெல்லி வரவுள்​ளார். அப்​போது நிச்​சய​மாக சோனியா,இராகுலைச் சந்​திப்​பார்.

தற்​போது ஜார்​கண்ட் மாநிலங்களவை சீட்,கர்​நாடகாவில் முதல்​வர் தேர்வு உள்​ளிட்ட விச​யங்​கள் குறித்து
விவா​திப்​ப​தற்​காக அந்த மாநில காங்​கிரசு தலை​வர்​கள் டெல்லி வந்​துள்​ளனர்.கடந்த இரண்டு நாட்​களாக இந்த விவாதங்​கள் சோனியா இல்​லத்​தில் தீவிர​மாக நடந்து வரு​வ​தால்,தமிழக முதல்​வருடன் விரி​வாக அமர்ந்து பேசுவதற்​கான நேர​மும் வாய்ப்​பும் காங்​கிரசு தலை​வர்​களுக்​குக் குறை​வாக இருந்​தது.இதில் யோசிப்​ப​தற்கோ
அல்​லது எதிர்​மறை​யாக நினைப்​ப​தற்கோ எது​வும் இல்​லை.நாங்​கள் தவெக கூட்​ட​ணி​யில் நீடிக்​கிறோம்,
அமைச்​சர​வை​யிலும் இருக்​கிறோம்.

எனவே,நாங்​கள் சந்​திப்​ப​தில் எந்​தச் சிக்​கலும் இல்​லை.விஜய் முதல்வ​ராக பதவி​யேற்​ற​போது இராகுல்தான்
முதல்ஆளாக வந்து பங்கேற்றார்.சோனியா காந்தி இல்​லத்​தில் முதல்​வருக்கு விருந்து கொடுக்​கத்
திட்​ட​மிடப்​பட்​டிருக்​கலாம்​.ஆனால்​,காங்​கிரசு தலை​மை சில முக்​கிய உள்​கட்​சி முடிவு​களை
எடுக்​கவேண்​டி​யிருந்​த​தால்​,அது அடுத்​த முறைக்​கு தள்​ளிவைக்​கப்​பட்​டிருக்​கலாம்​.

இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

இவர் இவ்வாறு கூறியிருப்பதன் மூலம்,விஜய் சந்திப்பைத் தவிர்த்தது இராகுல்தான் என்று தெரியவந்திருக்கிறது.விஜய் காங்கிரசு தயவில் ஆட்சி அமைத்திருந்தாலும் நடைமுறையில் பாஜக பக்கம் இருக்கிறார் என்பது தெரிய வந்திருப்பதாலேயே அவர் விஜய் சந்திப்பை இரத்து செய்தார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response