தொண்டன் படத்தை முடித்துவிட்ட சமுத்திரக்கனி தற்போது நடித்து வரும் படம் ‘ஏமாலி’. இந்தப்படத்தை ‘6 மெழுகுவர்த்திகள்’ படத்தை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் சாம் ஜோன்ஸ் என்ற புதுமுக ஹீரோவும் நடிக்கிறார். கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார்.
ஜெயமோகன் வசனம் எழுதும் இந்த ‘ஏமாலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ‘ஏமாலி’ என்று தலைப்பு தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஏமாலி என்பது தவறான வார்த்தை. ‘ஏமாளி’ என்பதே சரியான வார்த்தை என சிலர் பேச ஆரம்பித்தார்களாம்.
அதோடு இயக்குநர் வி.இசட்.துரைக்கும் இந்த தகவல் சென்றது. அதற்கு, அவர், “தெரிந்தேதான் ‘ஏமாலி’ என்று பெயர் வைத்துள்ளேன். படத்தில் இதற்கான காரணம் இருக்கிறது’ என்று சஸ்பென்ஸ் வைத்து பதில் கூறியுள்ளாராம். ஒருவேளை ஏ என்கிற இனிஷியல் கொண்ட மாலி என்பதாகத்தான் இருக்குமோ டைட்டிலின் அர்த்தம்..?