ஆர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் தான் ‘கடம்பன்’.. மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவா தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. வரும் ஏப்ரல்-14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது. ஆனால் இதற்கு கடும் போட்டி தரும் விதமாக பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள ‘சிவலிங்கா’ படமும் அதே தேதியில் தான் ரிலீஸாகிறது.
சிவலிங்காவுடன் மோதவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் ‘கடம்பன்’ யூனிட்டிற்கு அறவே கிடையாதாம். கடம்பன் படத்தை இரண்டு மாதங்கள் கழித்து தான் ரிலீஸ் செய்ய நினைத்திருந்தார்களாம். கடம்பன் படமும் ஏ.எல்.விஜய் டைரக்சனில் ஜெயம் ரவி நடித்துவரும் ‘வனமகன்’ படமும் காட்டை பின்னணியாக கொண்டுதான் உருவாகியுள்ளன..
இரண்டின் கதையும் வேறாக இருந்தாலும் கூட இதில் முதலாவது வெளியாகும் இது இரண்டாவதாக வெளியாகும் படத்தின் ரிசல்ட்டை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் ‘கடம்பன்’ படத்துக்கு இதைவிட்டால் நல்ல சூழல் கிடைக்காது என ஏப்ரல்-14ல் ரிலீஸ் செய்கிறார்களாம்.