ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த மதராசபட்டணம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். இவர் இலண்டனைச் சேர்ந்தவர்.
அவர்,விக்ரமுடன் தாண்டவம்,ஷங்கர் இயக்கிய ஐ,தனுஷ் நடித்த தங்க மகன்,உதயநிதியின் கெத்து,விஜய்யுடன் தெறி,ரஜினியுடன் 2.ஓ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் தவிர இந்தி, தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
எமிஜாக்சனுக்கும் பிரான்சைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் காதல் மலர்ந்தது.
இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நெருக்கமாக எடுத்துக்கொண்ட படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து காதலருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை எமிஜாக்சன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, “உங்களைக் காதலிக்கிறேன். எனது புதிய வாழ்க்கை தொடங்கி உள்ளது. இந்த உலகின் மகிழ்ச்சியான பெண்ணாக என்னை மாற்றிய உங்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
விரைவில் இவர்கள் திருமணம் நடக்கவிருக்கிறது.