முந்தைய தேர்தல்கள் வாக்குப்பதிவு விவரம் – இப்போது அதிகம் எவ்வளவு?

தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிக விழுக்காடு வாக்குகள் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ளது. ஆனாலும், சுமார் 1 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டி மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 4,58,86,784 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். இது 72.81 விழுக்காடு ஆகும்.அந்தத் தேர்தலில் சுமார் 1.80 கோடி பேர் வாக்களிக்கவில்லை.

அதேபோன்று, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின்போது தமிழ்நாட்டில் மொத்தம் 6,23,33,925 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 4,34,58,875 பேர் மட்டுமே வாக்களித்தனர். இது 76.60 விழுக்காடு ஆகும்.அப்போது, 1,88,75,050 பேர் வாக்களிக்கவில்லை.

அதேபோன்று தற்போது நடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,83,89,578 பேர் வாக்களித்துள்ளனர். இது 85 விழுக்காடு ஆகும். தற்போது 89,53,713 பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 இலட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 இலட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 இலட்சம் பேர் என மொத்தம் 97.37 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பின்னர், சுமார் 24 இலட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர்.இறுதியாக, சுமார் 69 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

அதன்பின் நடந்த இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரித்திருக்கிறது.இது சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை காரணாமாகவே இது நடந்திருக்கிறது என்கிறார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 1.80 கோடி பேர் வாக்களிக்கவில்லை.2024 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 1,88,75,050 பேர் வாக்களிக்கவில்லை.

இந்தத் தேர்தலில் மொத்த எண்னிக்கையில் சுமார் எழுபது குறைந்திருக்கிறது.சுமார் 90 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை, இரண்டையும் சேர்த்தால் சுமார் 1.60 கோடி வருகிறது.வழக்கமாக சுமார் 1.80 கோடி பேர் வாக்களிக்க மாட்டார்கள்.இப்போது 1.60 கோடிபேர் வாக்களிக்கவில்லை எனும்போது, சுமார் இருபது இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் வாக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன என்று சொல்லப்படுகிறது.

Leave a Response