மாவட்ட ஆட்சியர்கள் நயன்தாராவை பார்த்து ‘அறம்’ கற்கும் சூழல் வரலாம்..!


சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா கோபி நயினார் இயக்கும் ‘அறம்’ படத்தில் நேர்மையான ஐஏஎஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படத்தில், நிலத்தடி குழாய் ஒன்றில் மாட்டிக்கொள்ளும் குழந்தையை மீட்கும் முயற்சியில் நயன்தாரா ஈடுபடுகிறார்.

இதற்காக 100 அடிக்கு அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி குழாயில் மாவட்ட ஆட்சியரான நயன்தாரா தனது காட்சிகளில் நடித்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுர மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்துள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கேயே படமாக்கப்பட்டுள்ளன. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் ‘அறம்’ படத்தின் மூலம், மாவட்ட ஆட்சியர் என்பவர இப்படித்தான் இருக்கவேண்டும் என சொல்லும் விதமாக நயன்தாராவின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

Leave a Response