சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’ யார் தெரியுமா..?


இயக்குனர் சமுத்திரக்கனி சமுதாய பிரச்னைகளை படமாக எடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் ‘நிமிர்ந்து நில்’, ‘அப்பா ஆகிய படங்களும் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை சொல்லும் கதைகளாக தான் உருவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது அவர் தொண்டன் என்றொரு படத்தை இயக்கி வருகிறார்.

இதில் அவர் கதையின் நாயகனாக ஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்க, இன்னொரு வேடத்தில் விக்ராந்த் நடிக்கிறார். சுனைனாவும் நடிக்கிறார். தொண்டன் என்றதும் அரசியல் சம்பந்தப்பட்ட கதை என நினைத்துவிடவேண்டாம். படத்தில் அரசியல் துளியும் இல்லையாம்.

சாமானிய மக்களின் பிரச்சினைகளை கையிலெடுத்துள்ளாராம் சமுத்திரகனி. குறிப்பாக, அரசியல் சட்டதிட்டங்களால் நடுத்தர மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத்தான் ‘தொண்டன்’ மூலம் உணர்த்த இருக்கிறாராம்.

Leave a Response