
வெங்கட்பிரபு தற்போது சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இதில் முதல் பாகத்தில் நடித்த அனைவரும் நடித்திருக்கிறார்கள். யுவன் இசை அமைத்திருக்கிறார். அடுத்த வாரம் படம் வெளிவருகிறது. இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் உதவியுடன் படத்தை பேஸ்புக் வழியாக புரமோட் செய்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக தங்கள் படம் பற்றிய நேரலை ஒன்றை ஒளிபரப்பினார்கள்.
எதையாவது புதுமையாக செய்ய வேண்டும் என முடிவுசெய்த இயக்குனர் வெங்கட்பிரபு இந்த நேரலையில் ஒரு போட்டியும் நடத்தியுள்ளார்.. அதில் வெற்றி பெற்றவர்களில் 11 பேரை தேர்வு செய்து அவர்களுடன் சென்னை 28 அணி கிரிக்கெட் விளையாட இருக்கிறது. ஆனால் ஜெயித்தாலும் தோற்றாலும் பரிசு அவர்களுக்குத்தான் என்கிறார் வெங்கட்பிரபு.


