சூர்யாவும் இயக்குநர் ஹரியும் இணைந்து உருவாக்கியுள்ள சிங்கம்-3 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சமீபத்தில் முடிவடைந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்ப இந்தப்படம், டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டும் இருந்தது.. இந்நிலையில் சிங்கம் 3 படத்தின் வெளியீட்டை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பல திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிங்கம் 3 திரைப்படத்தின் வெளியீடும், அதே காரணத்திற்காகத்தான் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குதான் சூர்யாவின் ”பசங்க-2” திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.