சீனுராமசாமியின் தங்கை அனிதாவுக்கும் பாலாஜி என்பவருக்குமான திருமண வரவேற்பு நேற்று மாலை அரும்பாக்கம் லீ கிளப்பில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் திரளாக வந்து வாழ்த்தினார்கள்.. அதேசமயம் சர்ப்ரைஸ் விசிட்டாக மு.க.ஸ்டாலினும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.
உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதற்கு சில தினங்களுக்கு முன்புதான் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படம் பற்றி ஸ்டாலின் பாராட்டி, படத்தை பற்றி நீண்ட விமர்சனமும் எழுதியிருந்தார என்பது குறிப்பிடத்தக்கது.