மெரினா கடற்கரையை மூடிய விஜய் அரசு – மக்கள் அதிர்ச்சி

நீட் மோசடிகளுக்குப் பொறுப்​பேற்று ஒன்றிய கல்விஅமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலகவேண்​டும் என்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி டெல்லி ஜந்​தர் மந்தரில் தொடர் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.இந்தப் போராட்​டங்​களுக்கு பல்​வேறு எதிர்க்​கட்​சிகள்,மாணவர் அமைப்​பு​கள் ஆதரவு தெரி​வித்​துள்​ளன.சமீபத்​தில் நடைபெற்ற பேரணி​யின்​போது வன்​முறை ஏற்​பட்​டதைத் தொடர்ந்​து,பல மாநிலங்​களில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தி​லும் மாணவர் மற்​றும் இளைஞர் அமைப்​பு​கள் போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுத்​து​வரும் நிலை​யில், சமூகவலை​தளங்​கள் மூலம் கூட்​டத்தைத் திரட்டி சென்னை மெரினா கடற்​கரை​யில் போராட்​டம் நடத்​தப்​படலாம் என்ற தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்​தது.

இதையடுத்து நேற்று மெரினா மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டது.2 காவல் துணை ஆணை​யர்​கள் தலை​மை​யில் சுமார் 300 காவலர்கள் மெரினா கடற்​கரை​யில் பாது​காப்​புப்பணி​யில்
ஈடு​படுத்​தப்​பட்​டனர்.காம​ராஜர் சாலை,கடற்​கரைக்​குள் செல்​லும் நுழைவுவாயில்​கள் மற்​றும் முக்​கியசந்​திப்​பு​களில் கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தினர்.

நேற்று காலை முதலே மெரினா கடற்கரைப் பகுதிக்குச் செல்ல முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டது.யாரையும் கடற்கரைப் பகுதிக்கு அனுமதிக்கவில்லை.மாலை நேரத்தில் பொழுதுபோக்க சுற்றுலாப் பயணிகள்,வெளியூர் மக்கள் அதிகஅளவில் வந்ததால்,தீவிர சோதனைக்குப் பிறகு கடற்கரைப் பகுதிக்குச் செல்ல அவர்களை மட்டும் அனுமதித்தனர்.

மெரினா கடற்​கரைக்கு வரும் பொதுமக்​கள்,சுற்​றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்​டிகள் அனை​வரும் தீவிரசோதனைக்கு பிறகே அனு​ம​திக்​கப்​பட்​டனர்.சந்​தேகத்​துக்​கிட​மான நபர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

போராட்​டக்​காரர்​கள் கூட்​ட​மாக மெரி​னா​ கடற்கரைப் பகுதிக்​குள் நுழைவதைத் தடுக்​கவே இந்த நடவடிக்கை எடுக்​கப்பட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதற்​கிடையே,சைபர் க்ரைம் காவல்துறையினரும் வாட்​ஸ்​-அப், முகநூல், எக்ஸ் உள்​ளிட்ட
சமூகவலை​தளங்​களை தீவிர​மாகக் கண்​காணித்து வரு​கின்​றனர்.சமூக வலை​தளங்​கள் மூலம் மாணவர்​கள் மற்​றும் இளைஞர்​களை ஒன்​றிணைத்து திடீர் போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுக்​கும் முயற்​சிகள் நடைபெறுகிறதா
என்​பதை தீவிரமாகக் கண்​காணித்​து,தேவை​யான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக காவல்துறையினர் தெரி​வித்​தனர்.

முன்னறிவிப்பின்றி திடீரென மெரினா கடற்கரை மூடப்பட்டதால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சியில் தவித்துப்போயினர்.

அறவழிப்போராட்டங்களுக்கு ஆதரவு என்று சொல்லியிருந்த விஜய் அரசு,இப்படி அடாவடியாக மெரினாவை மூடியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என செயற்பாட்டாளர்கள் விமர்சித்துவருகின்றனர்.

Leave a Response